முதுமையில் காதுகேளாமை – கவனிக்க வேண்டிய அறிகுறிகள்.
வயது அதிகரிக்கும் போது செவித்திறன் படிப்படியாகக் குறைவது இயல்பான மாற்றமாகும். இதனை Presbycusisஎன மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆரம்பத்தில் உயர்ந்த ஒலிகள் கேட்காமல் போகும். காலிங் பெல், பறவைகளின் கீச்சு போன்ற ஒலிகள் கேட்க சிரமம் ஏற்படும். பின்னர் சாதாரண உரையாடல்களைக் கூட தெளிவாகக் கேட்க முடியாமல் போகலாம்.
ஒரே விஷயத்தை மீண்டும் சொல்லச் சொல்வது, டிவியின் ஒலியை அதிகப்படுத்துவது போன்றவை காதுகேளாமையின் ஆரம்ப அறிகுறிகளாகும். பல நேரங்களில் இந்த மாற்றத்தை முதலில் குடும்பத்தினரே கவனிப்பார்கள்.
காதுகேளாமைக்கு சிறந்த தீர்வாக காது கேட்கும் கருவி பயன்படுகிறது. ஒரு காதில் மட்டும் பிரச்னை இருந்தால் அந்தக் காதுக்கு மட்டும், இரண்டு காதுகளிலும் பாதிப்பு இருந்தால் இரண்டுக்கும் கருவி பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான கருவியைத் தேர்வு செய்வது முக்கியம்.
0
Leave a Reply